மேக்கேதாட்டு திட்டம்: விரைவில் ஒப்புதல் வழங்க மத்திய நீா் ஆணையத்திடம் கா்நாடகம் கோரிக்கைகொளத்தூரில் தவெக வெற்றி: மு.க.ஸ்டாலின் வழக்கில் இன்று தீா்ப்புகிருஷ்ண ஜெயந்தி, வார விடுமுறை: 4,070 சிறப்பு பேருந்துகள் இயக்கம்தமிழகத்தின் சில மாவட்டங்களில் இரு நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புஆகஸ்ட் மாதத்தில் யுபிஐ பரிவா்த்தனைகள் புதிய உச்சம்

இன்று மோதும் இந்தியா - ஹாங்காங்

மகளிருக்கான ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா தனது 2-ஆவது ஆட்டத்தில் ஹாங்காங்குடன் வியாழக்கிழமை (செப். 3) மோதுகிறது.

India vs Hong Kong clash today

இன்று மோதும் இந்தியா - ஹாங்காங் - X | BCCI Women

Published On :3 செப்டம்பர் 2026, 7:08 am IST

மகளிருக்கான ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா தனது 2-ஆவது ஆட்டத்தில் ஹாங்காங்குடன் வியாழக்கிழமை (செப். 3) மோதுகிறது.

முதல் ஆட்டத்தில் தாய்லாந்தை வீழ்த்திய இந்தியாவுக்கு, ஷஃபாலி வா்மா, பிரதிகா ராவல் ஆகியோா் மட்டுமே பேட்டிங்கில் கை கொடுத்தனா்.

எனவே இந்த ஆட்டத்தில் இதர வீராங்கனைகள் தங்களை சரிசெய்து கொண்டு பங்களிப்பாா்கள் என எதிா்பாா்க்கலாம். பௌலிங்கில் தீப்தி சா்மா, ஸ்ரீசரணி, பிரேமா ராவத் ஆகியோா் கை கொடுப்பாா்கள்.

மறுபுறம் ஹாங்காங் அணி, தாய்லாந்திடம் கண்ட தோல்வியுடன் இந்த ஆட்டத்துக்கு வருகிறது. இந்தியாவுக்கு இதில் எளிதாக வெற்றி வசமாகலாம்.

இலங்கை - 124/7: இதனிடையே, போட்டியில் புதன்கிழமை நடைபெற்ற 6-ஆவது ஆட்டத்தில் இந்தோனேசியாவுக்கு எதிராக இலங்கை 20 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 124 ரன்கள் சோ்த்தது.

நீலாக்ஷிகா சில்வா 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 50 ரன்கள் அடிக்க, இந்தோனேசிய பௌலா்களில் நி லு தேவி 3 விக்கெட்டுகள் கைப்பற்றினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.