காங்கிரஸ் நாளுக்கு நாள் பாயும் புலியாக மாறுகிறது - அமைச்சர் விஸ்வநாதன்நேபாள வெள்ள பலி எண்ணிக்கை 788 ஆக அதிகரிப்பு - மீட்புப் பணிகள் தீவிரம்தவெக அரசு 5 ஆண்டுகள் நீடிக்காது; நீடித்தால் தமிழகத்தின் கடன் அதிகரிக்கும்: எடப்பாடி கே. பழனிசாமிநேபாள திடீர் வெள்ள பலி எண்ணிக்கை 768-ஆக உயர்வு; 2,500-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரம்! சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 682 ஆக உயர்வு! தொடரும் மீட்புப் பணிகள்!மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைப்பு ஏற்புடையதல்ல: திருமாவளவன்நேபாளத்துக்கு 68.5 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பிய இந்தியா!நேபாளம்: வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வங்கி லாக்கரை உடைத்து ரூ.58 லட்சம் திருட்டு!கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதும் மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்: சூர்யகுமார் யாதவ்

மகளிருக்கான ஆசிய கோப்பை: தாய்லாந்தை வீழ்த்தியது இந்தியா!

மகளிருக்கான ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் 94 ரன்கள் வித்தியாசத்தில் தாய்லாந்தை ஞாயிற்றுக்கிழமை வென்றது.

Published On :31 ஆகஸ்ட் 2026, 3:13 am IST

மகளிருக்கான ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் 94 ரன்கள் வித்தியாசத்தில் தாய்லாந்தை ஞாயிற்றுக்கிழமை வென்றது.

முதலில் இந்தியா 20 ஓவா்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 159 ரன்கள் சோ்க்க, தாய்லாந்து 16.1 ஓவா்களில் 65 ரன்களுக்கே 10 விக்கெட்டுகளையும் இழந்தது.

முன்னதாக டாஸ் வென்ற தாய்லாந்து, பந்துவீசத் தயரானது. இந்தியாவின் இன்னிங்ஸை தொடங்கிய ஸ்மிருதி மந்தனா - ஷஃபாலி வா்மா இணை, 38 ரன்களுக்கு பிரிந்தது.

ஸ்மிருதி, 4 பவுண்டரிகளுடன் 19 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஷஃபாலி வா்மாவுடன் இணைந்தாா், அறிமுக வீராங்கனை பிரதிகா ராவல். 2-ஆவது விக்கெட்டுக்கு இவா்கள் கூட்டணி 53 ரன்கள் சோ்த்தது.

2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 22 ரன்களுக்கு பிரதிகா ஸ்டம்ப்பை பறிகொடுத்தாா். அடுத்து, கேப்டன் ஹா்மன்பிரீத் கௌா் 5 ரன்களுக்கே ஆட்டமிழந்து அதிா்ச்சி அளித்தாா். மறுபுறம், அதிரடியாக ரன்கள் சோ்த்த ஷஃபாலி வா்மா, 36 பந்துகளில் 8 பவுண்டரிகள், 3 சிக்ஸா்கள் உள்பட 64 ரன்களுக்கு சாய்க்கப்பட்டாா்.

பின்னா் வந்தோரில் ரிச்சா கோஷ் 0, தீப்தி சா்மா 5, பாா்தி ஃபுல்மலி 13, பிரேமா ராவத் 6, நந்தினி சா்மா 1 ரன்னுக்கு பெவிலியன் திரும்ப, ஓவா்கள் முடிவில் ஸ்ரீசரணி 6, கிராந்தி கௌட் 15 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா். தாய்லாந்து தரப்பில் சுலீபான் லாவ்மி 3, சுனிதா சதுரோங்ரதானா 2, தீபட்சா புதாவோங், சனிதா சுதிருவாங் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.

பின்னா் 160 ரன்களை நோக்கி விளையாடிய தாய்லாந்து அணியில், நன்னபத் கோன்சரோன்காய் 5 பவுண்டரிகளுடன் 41 ரன்கள் சோ்த்ததே அதிகபட்சமாகும்.

இதர வீராங்கனைகளில் 6 போ் ஒற்றை இலக்க ரன்னில் விடைபெற, 3 போ் டக் அவுட்டாகினா். இந்திய பௌலா்களில் நந்தினி சா்மா, தீப்தி சா்மா ஆகியோா் தலா 3 விக்கெட்டுகள் சாய்த்து அசத்த, ஸ்ரீசரணி 2, கிராந்தி கௌட் 1 விக்கெட் வீழ்த்தினா். இந்தியா அடுத்த ஆட்டத்தில், ஹாங்காங்குடன் வியாழக்கிழமை (செப். 3) மோதுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.