
பொங்கலுக்கு நடிகர் விஜய்யின் வாரிசு படமும், நடிகர் அஜித்தின் துணிவு படமும் வெளியாவது உறுதி என திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
நடிகர் அஜித்தின் துணிவு படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து துணிவு பொங்கலுக்கு வெளியாகும் என தகவல் பரவியது. நடிகர் விஜய்யின் வாரிசு படமும் பொங்கலுக்கு வெளியாகவிருப்பதால் கடுமையான போட்டி நிலவும் என்று கூறப்பட்டது.
இதையும் படிக்க | கார்த்தியின் 'சர்தார்' படத்துக்கு கிடைத்த சென்சார் விவரம் வெளியானது
கடந்த 2014 ஆம் ஆண்டு பொங்கலுக்கு நடிகர் விஜய்யின் ஜில்லா, நடிகர் அஜித்தின் வீரம் படமும் வெளியாகியிருந்தது. மீண்டும் 7 ஆண்டுகளுக்கு பிறகு பொங்கலை முன்னிட்டு நடிகர் விஜய்யின் படமும், நடிகர் அஜித்தின் படமும் வெளியாகவிருக்கிறது.
இந்த நிலையில் இதனை தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் உறுதி செய்துள்ளார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் ஜனவரி 12 ஆம் தேதி துணிவு படமும், ஜனவரி 13 ஆம் தேதி வாரிசு படமும் வெளியாகும். இரண்டு படங்களுக்கும் சமமான திரையரங்குகள் நிச்சயம் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.