வாடகைத் தாய் சர்ச்சை - நயன்தாரா விளக்கமளிக்க முடிவு

வாடகைத் தாய் சர்ச்சை குறித்து நடிகை நயன்தாரா கடிதம் மூலம் விளக்கமளிக்கவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. 
வாடகைத் தாய் சர்ச்சை - நயன்தாரா விளக்கமளிக்க முடிவு

வாடகைத் தாய் சர்ச்சை குறித்து நடிகை நயன்தாரா கடிதம் மூலம் விளக்கமளிக்கவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. 

அண்மையில் இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தானும் நயன்தாராவும் இரட்டைக் குழந்தைக்கு பெற்றோராகிவிட்டதாக அறிவித்து, இருவரும் குழந்தைகளுடன் இருக்கும் படங்களைப் பதிவிட்டிருந்தார். 

இதனையடுத்து நயன்தாரா வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றதாக சர்ச்சை உருவானது. இந்தியாவில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள திருமணமாகி 5 ஆண்டுகளாகியிருக்க வேண்டும், தம்பதியினருக்கு மருத்துவ காரணங்கள் இருக்க வேண்டும் போன்ற விதிமுறைகள் உள்ளது. 

விதிமுறையை மீறினாரா நயன்தாரா என ஊடகங்கள் கேள்வி எழுப்பினர். சுகாதார துறை அமைச்சர் மா.சுப்ரமணியம், 'விக்னேஷ் சிவன் - நயன்தாராவிடம் இதுகுறித்து  விளக்கம் கேட்கப்படும்' என்றார். 

இந்தியாவில் கடந்த ஜூன் மாதம் தான் சட்டம் நடைமுறைக்கு வந்ததாகவும் அதனால் விதிமுறைகளை மீறப்படவில்லை எனவும் நயன்தாராவுக்கு ஆதரவாகவும் கருத்துக்கள் வெளியாகின. 

இந்த நிலையில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள தங்கள் மேற்கொண்ட சட்ட நடைமுறைகள் குறித்து நயன்தாரா கடிதம் மூலம் விளக்கம் அளிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com