
தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு படத்தின் முதல் பாடல் தீபாவளியை முன்னிட்டு வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு படத்தின் முதல் பாடல் தீபாவளியை முன்னிட்டு வருகிற 23 ஆம் தேதி ஞாயிறன்று வெளியாகவுள்ளது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக இசையமைப்பாளர் தமன் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தீபாவளி எனக் குறிப்பிட்டுள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.
இதையும் படிக்க | பிரபல இயக்குநர் மீது மீண்டும் பாலியல் புகார்
முன்னதாக ''வெகுநாட்களாக காத்திருந்து .. இன்று நான் கண்ட கனவு நிறைவேறியது. என் வாழ்வில் மறக்க முடியாத நாள்'' என தமன் ட்வீட் செய்திருந்தார். நடிகர் விஜய் வாரிசு படத்துக்காக பாடல் பாடியதைத் தான் அவர் தெரிவிக்கிறார் என பலரும் தங்களது கணிப்பை வெளிப்படுத்தினர்.
துணிவு படத்தின் அப்டேட் வெளியாகுமா என அஜித் குமார் ரசிகர்களும் காத்திருக்கிறார்கள்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...