நானே வருவேன் படம் ஓடிடியில் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை என தமிழின் முக்கியமான படங்களைக் கொடுத்த செல்வராகவன் - தனுஷ் - யுவன் ஷங்கர் ராஜா கூட்டணி நீண்ட இடைவேளைக்கு பிறகு கைகோர்த்த படம் நானே வருவேன்.
தனுஷ் கதை எழுதியிருந்த இந்தப் படத்தை செல்வராகன் இயக்கியிருந்தார். கலைப்புலி தாணு தனது வி கிரியேஷன்ஸ் சார்பாக இந்தப் படத்தை தயாரித்திருந்தார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்திருந்தார்.
ஓரளவுக்கு நல்ல விமர்சனங்களைப் பெற்ற இந்தப் படம் பொன்னியின் செல்வனுடன் வெளியானதால் கவனம் பெறாமல் போனது. இந்த நிலையில் வருகிற அக்டோபர் 27 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.