மிருதங்கம் வாசிக்கும் இயக்குநர் வெங்கட் பிரபு - பிரபல நடிகர் பகிர்ந்த விடியோ

இயக்குநர் வெங்கட் பிரபு மிருதங்கம் வாசிக்கும் விடியோவை பிரபல நடிகர் பகிர்ந்துள்ளார். 
மிருதங்கம் வாசிக்கும் இயக்குநர் வெங்கட் பிரபு - பிரபல நடிகர் பகிர்ந்த விடியோ

இயக்குநர் வெங்கட் பிரபு மிருதங்கம் வாசிக்கும் விடியோவை பிரபல நடிகர் பகிர்ந்துள்ளார். 

மாநாடு மற்றும் மன்மத லீலை படங்களுக்கு கிடைத்த வரவேற்புக்கு பிறகு இயக்குநர் வெங்கட் பிரபு தெலுங்கில் நாக சைதன்யா நடிக்கும் படத்தை இயக்கிவருகிறார். 

நாக சைதன்யாவுக்கு ஜோடியாக க்ரித்தி ஷெட்டி நடிக்க, பிரியாமணி, அரவிந்த் சாமி, சரத்குமார், பிரேம்ஜி, வெண்ணிலா கிஷோர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்துக்கு இளையராஜா - யுவன் ஷங்கர் ராஜா இணைந்து இசையமைக்கின்றனர். 

எம்ஜிஆர்,இளையராஜா, கங்கை அமரன் ஆகியோருடன் சிறுவயதில் வெங்கட் பிரபு
எம்ஜிஆர்,இளையராஜா, கங்கை அமரன் ஆகியோருடன் சிறுவயதில் வெங்கட் பிரபு

சமீபத்தில் இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கர்நாடகாவில் நடைபெற்றது. 

இதன் ஒரு பகுதியாக இயக்குநர் வெங்கட் பிரபு மிருதங்கம் வாசிக்கும் விடியோவை நடிகர் நிதின் சத்யா பகிர, அதற்கு வெங்கட் பிரபு 'டேய்' என கமெண்ட் செய்துள்ளார்.

இயக்குநர் வெங்கட் பிரபு சிறுவயதிலேயே மிருதங்கம் கற்று மறைந்த நடிகரும் முன்னாள் முதல்வருமான எம்ஜிஆரின் முன்னிலையில் அரங்கேற்றம் செய்திருக்கிறார். அப்போது எம்ஜிஆர், இளையராஜாவின் அண்ணன் பாஸ்கர், இளையராஜா, கங்கை அமரன் உள்ளிட்டோருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com