'காந்தாரா' பட எதிரொலி: தமிழ்நாடு அரசின் பாணியில் களமிறங்கிய கர்நாடக அரசு

காந்தாரா பட எதிரொலியாக தெய்வ நர்த்தகர்களுக்கு கர்நாடக அரசு உதவ முன் வந்துள்ளது. 
'காந்தாரா' பட எதிரொலி:  தமிழ்நாடு அரசின் பாணியில் களமிறங்கிய கர்நாடக அரசு

சிறிய பட்ஜெட்டில் கன்னடத்தில் மட்டும் வெளியான காந்தாரா திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனையடுத்து தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி வசூலை வாரிக் குவித்துவருகிறது. 

வெறும் ரூ.16 கோடி பட்ஜெட்டில் உருவான படம் தற்போது ரூ. 170 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாம். இன்னும் இப்படத்தின் வசூல் வேட்டை தொடர்ந்துகொண்டிருக்கிறது. கேஜிஎஃப்க்கு பிறகு மிகவும் அறியப்படும் கன்னடத் திரைப்படமாக காந்தாரா இடம்பெற்றுள்ளது.

காந்தாரா படத்தை ரிஷப் ஷெட்டி எழுதி, தயாரித்து இயக்கி ஹீரோவாகவும் நடித்துள்ளார். காந்தாரா படத்தில் தெய்வ நர்த்தகர்களின் துயரம் பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது. 

இந்த நிலையில் கர்நாடக அரசு 60 வயதுக்கு மேற்பட்ட தெய்வ நர்த்தகர்களுக்கு மாதம் ரூ. 2000 உதவித்தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளது. 

முன்னதாக ஜெய்பீம் படம் ஏற்படுத்திய தாக்கம் காரணமாக இருளர், குறவர் இன மக்கள் வாழும் பகுதிகளில் அமைச்சர்கள், அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், மற்றும் அரசின் நலத்திட்டங்கள் சேர நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com