பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் குறித்த விடியோவை நடிகர் விக்ரம் பகிர்ந்துள்ளார்.
பிரிட்டன் வரலாற்றில் முதல் இந்திய வம்சாவளி ரிஷி சுனக் பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்டார். இதனையடுத்து அவருக்கு இந்திய அளவில் பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக ரிஷி சுனக் பிரிட்டன் பிரதமராகியுள்ளது அந்நாட்டு மக்கள் ஒரு சிலருக்கு பிடிக்கவில்லை எனத் தெரிகிறது. ''அவர் கருப்பினத்தவர், வேறு நாட்டுக்காரர் நம் பிரச்னைகளை அவரால் சரியாக புரிந்துகொள்ள முடியாது'' என்று டிவி நிகழ்ச்சியில் ஒருவர் பேசியுள்ளார்.
'தி டெய்லி ஷோ' நிகழ்ச்சியின் தொகுப்பாளர் இந்த விடியோவைப் பகிர்ந்து 'ஒருவரின் கொள்கை, திறமை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு மதிப்பிட வேண்டுமே தவிர அவரது நிறத்தை மதிப்பிடக் கூடாது' என பேசியுள்ளார்.
இந்த விடியோவைப் பகிர்ந்த நடிகர் விக்ரம், ''இதைப் பார்த்ததிலிருந்து என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. மன்னிக்கவும், இதனை பகிர வேண்டும் என நினைத்தேன். இந்தியாவுக்கு பெருமை. முதல் தமிழ் இந்தியன் அமெரிக்காவின் குடியரசு துணை தலைவர், இப்பொழுது முதல் இந்திய வம்சாவளி பிரிட்டிஷ் பிரதமர். வா ராஜா வா'' எனக் குறிப்பிட்டுள்ளார்.
à®à®¤à¯ பாரà¯à®¤à¯à®¤à®¤à¯à®¤à®¿à®²à®¿à®°à¯à®¨à¯à®¤à¯ à®à®©à¯ à®à®¿à®°à®¿à®ªà¯à®ªà¯ à®à®à®à¯à®à®®à¯à®à®¿à®¯à®¿à®²à¯à®²à¯. Sorry but i have to share it. Way to go India. First a தமிழ௠Indian VP of the US. And now a British PM of Indian descent. வா ராà®à®¾ வா https://t.co/eGVnnT74OZ
â Aditha Karikalan (@chiyaan) October 26, 2022
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தெருநாய்களுக்கு அஞ்சி தோட்டத்தில் தவித்த புள்ளி மான் மீட்பு

கே.கே. நகா் ரயில்வே மேம்பாலம் அருகே இளைஞரின் சடலம் மீட்பு
விழுப்புரம் மாவட்டத்தில் விபத்து உள்ளிட்ட நிகழ்வுகளில் 6 போ் உயிரிழப்பு

எம்எஸ்எம்இ மேம்பாட்டு திருத்த மசோதா: அமளிக்கு இடையே மாநிலங்களவையில் நிறைவேற்றம்
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



