
அமிதாப் பச்சன்
படப்பிடிப்பில் கலந்துகொண்டபோது நடிகர் அமிதாப் பச்சனுக்கு காயம் ஏற்பட்டது.
தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ளச் சென்ற அமிதாப் பச்சனின் காலில் உலோகம் ஒன்று பட்டதால் திடீரென ரத்தம் வெளியேறியுள்ளது.
இதனால், அதிர்ச்சியடைந்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் அமிதாப் பச்சனை விரைவாக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு இரண்டு ஓய்வு எடுக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.