
பீஸ்ட் படத்துக்குப் பிறகு பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சியின் இயக்கத்தில் வாரிசு என்கிற படத்தில் நடித்து வருகிறார் விஜய்.
ராஷ்மிகா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்துக்கு இசை - தமன். தமிழில் படமாக்கப்பட்டு தெலுங்கில் டப் செய்யப்படும் எனச் சமீபத்தில் விஜய் பேட்டியளித்திருந்தார். இது விஜய் நடிக்கும் 66-வது படம். வாரிசு, 2023 பொங்கல் தினத்தன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வாரிசு படத்தின் புகைப்படங்கள் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஏராளமான வாரிசு படத்தின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.