
விக்ரம் திரைப்படத்தின் 100 நாள் வெற்றியைக் கொண்டாட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் தயாரித்து நடித்த விக்ரம் திரைப்படம் கடந்த ஜூன் 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி பெரும் வசூல் சாதனையைப் படைத்தது. அதனைத் தொடர்ந்து ஓடிடியில் வெளியானாலும் தமிழைத் தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளிலும் இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு இருந்துவருகிறது.
இதையும் படிக்க- விஜய்க்கு வில்லனாகும் பிரபல இயக்குநர்
இந்தப் படம் 400 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதனிடையே விக்ரம் திரைப்படம் 100 நாள் திரையரங்குகளில் ஓடி சாதனை படைத்தது.
இந்நிலையில், வருகிற நவம்பர் 7 ஆம் தேதி கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் விக்ரம் வெற்றியை பிரம்மாண்டமாகக் கொண்டாட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





