பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

விஜய்க்கு வில்லனாகும் பிரபல இயக்குநர்

லோகேஷ் கனகராஜ் இயக்கும் தளபதி 67 படத்தில் நடிகர் விஜய்க்கு வில்லனாக நடிக்க பிரபல இயக்குநர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Published On :

லோகேஷ் கனகராஜ் இயக்கும் தளபதி 67 படத்தில் நடிகர் விஜய்க்கு வில்லனாக நடிக்க பிரபல இயக்குநர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

விக்ரம் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தளபதி 67 படத்திற்கான வேலைகளில் மும்முரமாகியுள்ளார். 

மாஸ்டர், விக்ரம், ஆகிய படங்களிலும் ரத்ன குமார் திரைக்கதை எழுதினார். அந்த திரைப்படங்கள் பெரும் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து, தற்போது தளபதி 67 திரைப்படத்திலும் திரைக்கதையாசிரியராக ரத்ன குமார் பணியாற்றுகிறார்.

மேலும், தளபதி 67 படத்தின் அப்டேட்டுகளை அடுத்தடுத்து இயக்குநர் வெளியிட வேண்டும் என ரசிகர்கள் ட்விட்டரில் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். 

இந்நிலையில், இயக்குநர் மிஷ்கின் விஜய்க்கு வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இன்னொரு வில்லனாக நடிக்க பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்திடமும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்.

முன்னதாக, இப்படத்தில் நடிகர் விஜய்க்கு வில்லனாக நடிக்க திரைப்பட இயக்குநர் கெளதம் வாசுதேவ் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.