கமல்ஹாசன், சிரஞ்சீவிக்கு தெலங்கானா அரசு திரைப்பட விருது லெபனானில் மாயமான இஸ்ரேல் வீரரைத் தேடி வான்வழித் தாக்குதல்: 41 போ் உயிரிழப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்காசட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

'ஒரு கிடாயின் கருணை மனு' படத்தின் இசையமைப்பாளர் காலமானார்! 

ஒரு கிடாயின் கருணை மனு படத்தின் இசையமைப்பாளர் ஆர். ரகுராம் காலமானார். 

News image
Updated On :31 அக்டோபர் 2022, 12:35 pm

DIN

ஒரு கிடாயின் கருணை மனு படத்தின் இசையமைப்பாளர் ஆர். ரகுராம் காலமானார். 

2017ஆம் ஆண்டு சுரேஷ் சங்கைய்யா இயக்கத்தில் வெளியான ‘ஒரு கிடாயின் கருணை மனு’ படம் விமர்சன் ரீதியாக நல்ல வரவேற்பினைப் பெற்றது. இதில் விதார்த், ரவீனா ரவி நடித்திருந்தனர். இந்தப் படத்திற்கு இசையமைத்ததின் மூலம் அறியப்பட்டவர் இசையமைப்பாளர் ஆர். ரகுராம். 

ஏராளமான குறும்படங்கள் மற்றும் தனிப்பட்ட இசை ஆல்பங்களில் பணியாற்றியுள்ளார். அவரது இசையில் பிரேம்ஜி நடிப்பில் உருவாகியுள்ள ‘சத்திய சோதனை’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில், அரியவகை நோயினால் பாதித்த ரகுராம் 38 வயதிலேயே சனிக்கிழமை (அக்.29) உயிரிழந்ததிற்கு சினிமா ரசிகர்கள் மற்றும் அவரது உறவினர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.