
'நளனும் நந்தினியும்', 'நட்புனா என்னனு தெரியுமா', 'முருங்கைக்காய் சிப்ஸ்' போன்ற பல படங்களைத் தயாரித்தவர் ரவீந்தர் சந்திரசேகர். இவர் 'முருங்கைக்காய் சிப்ஸ்' படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.
யூடியூப் சேனல்களில் பிக்பாஸ் குறித்து விமர்சனம் செய்து மிகவும் பிரபலமானார். நக்கல் கலந்த இவரது பேச்சு ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தது. இந்த நிலையில் இவர் சின்னத்திரை நடிகை மகாலக்ஷ்மியைத் திருமணம் செய்துகொண்டுள்ளார்.
இதையும் படிக்க | நடிகர் விஜய்யுடனான சந்திப்பின் பின்னணி - புகைப்படங்களுடன் வரலக்ஷ்மி தகவல்
திருமண புகைப்படங்களை மகாலக்ஷ்மி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, ''என் வாழ்க்கையில் நீங்கள் இருப்பது என்னுடைய அதிர்ஷ்டம். உங்கள் அன்பால் என் வாழ்க்கையை அழகாக்கிவிட்டீர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
'விடியும்வரை காத்திரு' என்ற படத்தை ரவீந்தர் தயாரித்துவருகிறார். அந்தப் படத்தில் நடித்தபோது இருவருக்கும் காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஏற்கனவே திருமணமான மகாலக்ஷ்மி கணவரைப் பிரிந்துவாழ்ந்துவரும் நிலையில் அவருக்கு ஒரு மகன் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.