
சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ் படத்திலிருந்து பிம்பிலிக்கி பிலாப்பி பாடல் வெளியானது.
டாக்டர், டான் என அடுத்து இரண்டு வெற்றிப்படங்களைக் கொடுத்திருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன். இதனால் அவர் நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகவிருக்கும் பிரின்ஸ் படத்தின் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது.
பிரின்ஸ் படத்தை தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்க, உக்ரைன் நடிகை மரியா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் நடிகர் சத்யராஜ், பிரேம்ஜி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
இதையும் படிக்க | பிரபல நடிகையைத் திருமணம் செய்துகொண்ட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர்
ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் இந்தப் படத்துக்கு தமன் இசையமைக்கிறார். இந்தப் படத்திலிருந்து முதல் பாடலாக பிம்பிலிக்கி பிலாப்பி என்ற பாடல் வெளியாகியுள்ளது. அனிருத் பாடியுள்ள இந்தப் பாடலை விவேக் எழுதியுள்ளார்.