அல்போன்ஸ் புத்ரன் இயக்கத்தில் பிரித்விராஜ் நயன்தாரா நடித்துள்ள கோல்டு திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான அல்போன்ஸ் புத்ரன் இயக்கத்தில் நிவின் பாலி, சாய் பல்லவி, அனுபமா பரமேஸ்வரன், மடோனா செபாஸ்டியன் நடித்த பிரேமம் திரைப்படம் நல்ல வெற்றியைப் பதிவு செய்தது. தமிழ்நாட்டிலும் வெற்றிகரமாக இந்தப் படம் 100 நாட்களைக் கடந்து ஓடியது.
இதையும் படிக்க | தமிழ்நாடு அரசு திரைப்பட மற்றும் சின்னத்திரை விருதுகள் அறிவிப்பு
நீண்ட இடைவேளைக்கு பிறகு கோல்டு என்ற படத்தை அல்போன்ஸ் புத்ரன் இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தில் பிரித்விராஜ், நயன்தாரா இருவரும் நாயகன் நாயகியாக நடித்துள்ளனர். முதலில் இந்தப் படம் செப்டம்பர் 9 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இந்தப் படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விளக்கமளித்துள்ள இயக்குநர் அல்போன்ஸ் புத்ரன், ''இன்னும் வேலைகள் முடிவடையாததால் கோல்டு ஒனம் பண்டிக்கைக்கு அடுத்த வாரம் வெளியாகிறது. தயவுசெய்து எங்களை மன்னித்துவிடுங்கள்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

என்னுடைய அப்பாவை நினைத்து பெருமைப்படுகிறேன்! - ஹபீபி படத்தைப் பாராட்டிய தனுஷ்!
ஹாலிவுட்டில் பயிற்சி, அம்மாவின் சிபாரிசு... விஜய் நேர்காணல் - 3!

மாட் ரென்ஷா, டிம் டேவிட் அதிரடி: வங்கதேசத்துக்கு 197 ரன்கள் இலக்கு!

கொல்கத்தா விமான நிலையத்தில் இண்டிகோ விமானம் மீது மின்னல் தாக்கியதால் பரபரப்பு
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK



