தமிழ்நாடு அரசு திரைப்பட மற்றும் சின்னத்திரை விருதுகள் அறிவிப்பு

தமிழ்நாடு அரசு திரைப்பட மற்றும் சின்னத்திரை விருதுகள் வழங்கும் விழா வருகிற 4 ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. 
தமிழ்நாடு அரசு  திரைப்பட மற்றும் சின்னத்திரை விருதுகள் அறிவிப்பு

தமிழ்நாடு அரசு திரைப்பட மற்றும் சின்னத்திரை விருதுகள் வழங்கும் விழா வருகிற 4 ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. 

ஒவ்வொரு ஆண்டும் திரைப்பட மற்றும் சின்னத்திரை கலைஞர்கள், திரைப்பட கல்லூரி மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பாக விருதுகள் வழங்கப்படும். இந்த நிலையில் கடந்த 2009 ஆண்டு முதல் 2014 ஆண்டுக்கான விருது பெரும் திரைப்படம், கலைஞர்கள், சின்னத்திரை கலைஞர்கள் ஆகியோரின் பெயர்கள் அறிவிக்கப்பட்டது. 

ஆனால் இதுவரை விருதுகள் வழங்கப்படவில்லை. இந்த நிலையில் திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டு முடிந்த நிலையில், விருது வழங்கும் விழா அறிவிக்கப்பட்டுள்ளது.

வருகிற 4 ஆம் தேதி மாலை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் விழாவில் 2009 ஆம் ஆண்டிலிருந்து 2014 ஆண்டுவரையிலான சிறந்த திரைப்பட, சின்னத்திரை கலைஞர்களுக்கும் திரைப்பட கல்லூரி மாணவர்களுக்கும் விருதுகள் வழங்கப்படவுள்ளன. 

அதன்படி சிறந்த திரைப்படங்களின் தயாரிப்பாளர்களுக்கு முதல் பரிசாக ரூ.2 லட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.1 லட்சமும் வழங்கப்படவுள்ளன. சிறந்த நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் 160 பேருக்கு தலா 5 சவரன் தங்கப்பதக்கம் வழங்கப்படவுள்ளன. 

அதே போல சின்னத்திரை தொடர்களின் தயாரிப்பாளர்களுக்கு முதல் பரிசாக ரூ.2 லட்சமும், இரண்டாம் பரிசாக ரூ. 1 லட்சமும் சிறந்த வாழ்நாள் சாதனையாளர்களுக்கு தலா ரூ.1 லட்சமும் சிறந்த கதாநாயகன், கதாநாயகி மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் 81 பேருக்கு தலா 3 சவரன் தங்கமும் வழங்கப்படவுள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com