சிறந்த தொகுப்பாளருக்கான விருதை வென்றார் ஒபாமா!

சிறந்த தொகுப்பாளருக்கான ‘எம்மி’ விருதை அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா வென்றுள்ளார்.
அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா
அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா

சிறந்த தொகுப்பாளருக்கான ‘எம்மி’ விருதை அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா வென்றுள்ளார்.

ஒபாமாவும், அவரது மனைவி மிஷேலும் இணைந்து ‘அவர் கிரேட் நேஷனல் பார்க்ஸ்’ என்ற தலைப்பில் ஆவணப்படத்தை அவர்களது தயாரிப்பு நிறுவனமான 'ஹையர் கிரவுண்ட்' மூலம் தயாரித்து கடந்த ஏப்ரல் மாதம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியிட்டனர்.

இந்த ஆவணப்படத்தில், உலகம் முழுவதும் உள்ள தேசிய பூங்காக்களின் சிறப்பம்சங்கள் இடம்பெற்றிருந்தது. மொத்தம் ஐந்து பாகங்களாக தயாரிக்கப்பட்ட இந்த தொடரை ஒபாமாவே தொகுத்து வழங்கியுள்ளார்.

இந்ந நிலையில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற எம்மி விருதுகள் வழங்கும் விழாவில் ‘அவர் கிரேட் நேஷனல் பார்க்ஸ்’ ஆவணப்படத்திற்காக ஒபாமாவுக்கு சிறந்த தொகுப்பாளர் விருது வழங்கப்பட்டுள்ளது.

எம்மி விருதை பெற்ற இரண்டாவது முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, 1956-ஆம் டுவைட் டி. ஐசனோவர்ஸ் இந்த விருதை பெற்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com