பொன்னியின் செல்வனில் ஐஸ்வர்யா ராய்க்கு டப்பிங் கொடுத்த பிரபலம்!

பொன்னியின் செல்வன் படத்தில் பிரபல நடிகை ஐஸ்வர்யா ராய்க்குக் குரல் கொடுத்துள்ளதாக நடிகையும் டப்பிங் கலைஞருமான...
பொன்னியின் செல்வனில் ஐஸ்வர்யா ராய்க்கு டப்பிங் கொடுத்த பிரபலம்!
Published on
Updated on
1 min read

பொன்னியின் செல்வன் படத்தில் பிரபல நடிகை ஐஸ்வர்யா ராய்க்குக் குரல் கொடுத்துள்ளதாக நடிகையும் டப்பிங் கலைஞருமான தீபா வெங்கட் கூறியுள்ளார். 

எழுத்தாளர் கல்கி எழுதிய புகழ்பெற்ற வரலாற்று நாவலான பொன்னியின் செல்வன் கதையைப் படமாக்கியுள்ளார் இயக்குநர் மணி ரத்னம்.

விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, சரத் குமார், பிரபு, ஜெயராம், ரஹ்மான், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, அஸ்வின், கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். படத்தின் திரைக்கதையை மணி ரத்னமும் குமரவேலும் இணைந்து உருவாக்கியுள்ளார்கள். வசனம் - ஜெயமோகன், இசை - ஏ.ஆர். ரஹ்மான், ஒளிப்பதிவாளர் - ரவி வர்மன், கலை - தோட்டா தரணி. பொன்னியின் செல்வன் படம் செப்டம்பர் 30 அன்று வெளியாகவுள்ளது. 

பொன்னியின் செல்வன் படத்தின்  பாடல்கள் மற்றும் டிரைய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. மணி ரத்னம், ஏ.ஆர். ரஹ்மான், ஐஸ்வர்யா ராய், விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா உள்பட படக்குழுவினர் பலரும் இவ்விழாவில் கலந்துகொண்டார்கள். சிறப்பு விருந்தினர்களாக ரஜினிகாந்தும் கமல் ஹாசனும் கலந்துகொண்டார்கள். 

இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில்  நடிகை ஐஸ்வர்யா ராய்க்குக் குரல் கொடுத்துள்ளதாக நடிகையும் டப்பிங் கலைஞருமான தீபா வெங்கட் இன்ஸ்டகிராமில் பதிவு எழுதியுள்ளார். அவர் மேலும் கூறியதாவது:

முதல்முறையாக ஐஸ்வர்யா ராய்க்குக் குரல் கொடுத்துள்ளேன். அவரைப் பற்றி நிறைய சொல்ல இருக்கிறது. அதைத் தனிப் பதிவாகப் பிறகு வெளியிடுகிறேன். இந்த வாய்ப்புக்காக உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது மணி சார் என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com