துல்கர் சல்மானின் நடிப்பில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற சீதா ராமம் திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
தெலுங்கு, தமிழ், மலையாளம் மொழிகளில் உருவாகியுள்ள நடிகர் துல்கர் சல்மானின் சீதா ராமம் திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியானது.
இதையும் படிக்க | நடிகை சமந்தாவின் யசோதா திரைப்பட டீசர் வெளியீடு
இந்தப் படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக மிருணாள் தாக்கூர் நடிக்க, ராஷ்மிகா ஒரு முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை ஸ்வப்ன சினிமா மற்றும் வைஜெயந்தி மூவிஸ் தயாரிக்க, லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஹனு ராகவபுடி இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
இந்நிலையில் இந்தத் திரைப்படமானது அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.