நடிகை சமந்தாவின் யசோதா திரைப்பட டீசர் வெளியீடு

நடிகை சமந்தா நடித்துள்ள ஆக்‌ஷன் த்ரில்லரான யசோதா திரைப்படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். 
நடிகை சமந்தாவின் யசோதா திரைப்பட டீசர் வெளியீடு
நடிகை சமந்தாவின் யசோதா திரைப்பட டீசர் வெளியீடு

நடிகை சமந்தா நடித்துள்ள ஆக்‌ஷன் த்ரில்லரான யசோதா திரைப்படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். 

ஹரி - ஹரீஷ் இயக்கத்தில் நடிகை சமந்தா நடிக்கும் திரைப்படம் யசோதா. 5 மொழிகளில் தயாராகும் இந்தத் திரைப்படத்தில் நடிகை சமந்தாவுடன் வரலட்சுமி சரத்குமார், சம்பத் ராஜ், மதுரிமா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

ஏற்கெனவே இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவடைந்துள்ள நிலையில் தற்போது படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. 

ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படத்தில் நடிகை சமந்தா சிறப்பாக நடித்துள்ளதாக படக்குழு விளம்பரப்படுத்தி வருகிறது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com