/

''வந்தியத்தேவன் வருவான், அருண்மொழியை இழுத்து வா'' - பொன்னியின் செல்வன் வசனத்தை பகிர்ந்த விக்ரம்

பொன்னியின் செல்வன் பட வசனத்தை நடிகர் விக்ரம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 3:48 pm IST

பொன்னியின் செல்வன் படம் வருகிற 30 ஆம் தேதி வெளியாகும் நிலையில் படத்தை விளம்பரப்படுத்தும் முயற்சிகளில் படக்குழுவினர் ஈடுபட்டுவருகின்றனர்.  அதன்  ஒரு பகுதியாக பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழா ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் முன்னிலையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.  

இந்த நிலையில் இந்தப் படத்தில் ஆதித்ய கரிகாலனாக நடித்துள்ள விக்ரம் தனது ட்விட்டர் பக்கத்தில் பொன்னியின் செல்வன் வசனத்தைப் பகிர்ந்துள்ளார்.

அவரது பதிவில், ''சரி. தஞ்சைக்கு வருகிறேன். எட்டு திக்கும் புலிக்கொடி நாட்டும் திரைப்பயணம் தொடங்கும் முன் பெருவுடையாரின் ஆசி வேண்டுமல்லவா?குந்தவை, உடன் வருகிறாயா? வந்தியத்தேவன் வருவான். என்ன நண்பா, வருவாய் தானே? அப்படியே அந்த அருண்மொழியையும் இழுத்து வா!'' என்று குறிப்பிட்டுள்ளார். 

பொன்னியின் செல்வனில் வந்தியத்தேவனாக கார்த்தியும் அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவியும், குந்தவையாக திரிஷாவும் நடித்துள்ளனர். இதில் விக்ரம், ஜெயம் ரவி, திரிஷா ஆகியோர் சகோதர, சகோதரிகளாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.