நிஜ வாழ்க்கையிலும் என்னை அன்புடன் வழிநடத்தும் எனது குருசாமி ஜெயராம் என நடிகர் ஜெயம் ரவி தெரிவித்துள்ளார்.
எழுத்தாளர் கல்கி எழுதிய புகழ்பெற்ற வரலாற்று நாவலான பொன்னியின் செல்வன் கதையைப் படமாக்கியுள்ளார் இயக்குநர் மணி ரத்னம்.
விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, சரத் குமார், பிரபு, ஜெயராம், ரஹ்மான், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லக்ஷ்மி உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளார்கள்.
படத்தின் திரைக்கதையை மணி ரத்னமும் குமரவேலும் இணைந்து உருவாக்கியுள்ளார்கள். வசனம் - ஜெயமோகன், இசை - ஏ.ஆர். ரஹ்மான், ஒளிப்பதிவாளர் - ரவி வர்மன், கலை - தோட்டா தரணி.

இந்தப்படம் செப்டம்பர் 30 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் படப்புரமோஷனுக்காக படக்குழுவினர் பல்வேறு இடங்களுக்கு சென்று வருகின்றனர். அதையொட்டி படம் வெற்றி பெற நடிகர் ஜெயம் ரவி பம்பையிலுள்ள சபரிமலைக்கு நடிகர் ஜெயராமுடன் சென்றுள்ளார். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த ஜெயம்ரவி கூறியதாவது:
பொன்னியின் செல்வனில் ஆழ்வார்க்கடியான் நம்பியைப்போல நிஜ வாழ்க்கையிலும் என்னை அன்புடன் வழிநடத்தும் எனது குருசாமி ஜெயராமுடன் பம்பையில் !!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்றைய ராசி பலன்கள் (ஆகஸ்ட் 04) - இன்று வெற்றி யாருக்கு?

லிவ் இன் முறையில் வாழ்பவா்களுக்கும் ஐபிசி பிரிவு 498ஏ பொருந்தும்: உச்சநீதிமன்றம் தீா்ப்பு

தொழில்நுட்பத்துக்கு கைமாறும் அதிகாரங்கள்
சென்னை - குருவாயூா் விரைவு ரயில் 10 நாள்கள் தாமதமாக இயங்கும்!
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



