ராஜ ராஜ சோழன் யார் தெரியுமா? ஆவேசப் பேச்சால் அசர வைத்த விக்ரம்

மும்பையில் நடைபெற்ற பொன்னியின் செல்வன் விளம்பர நிகழ்ச்சியில் தனது ஆவேசப் பேச்சால் அசர வைத்தார் சீயான் என அவரது ரசிகர்களால் அன்பாக அழைக்கப்படும் விக்ரம்.
ராஜ ராஜ சோழன் யார் தெரியுமா? ஆவேசப் பேச்சால் அசர வைத்த விக்ரம்
ராஜ ராஜ சோழன் யார் தெரியுமா? ஆவேசப் பேச்சால் அசர வைத்த விக்ரம்


ராஜ ராஜ சோழன் யார் தெரியுமா? அவர் தஞ்சை பெரிய கோயிலை எப்படிக் கட்டினார் தெரியுமா? என்று மும்பையில் நடைபெற்ற பொன்னியின் செல்வன் விளம்பர நிகழ்ச்சியில் தனது ஆவேசப் பேச்சால் அசர வைத்தார் சீயான் என அவரது ரசிகர்களால் அன்பாக அழைக்கப்படும் விக்ரம்.

மும்பையில் நடந்த விழாவில், ராஜ ராஜ சோழனின் பெருமைகளை, ரமணா படத்தில் விஜயகாந்த் புள்ளி விவரங்களோடு சொல்லி கைத்தட்டலைப் பெற்ற காட்சி போல, ராஜ ராஜ சோழன் கட்டிய அணை முதல், ஊர்களுக்கு பெண்களின் பெயர்களை சூட்டியது என அனைத்தையும் ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி அதுவும் மும்பை வாழ் மக்களுக்குப் புரியும் வகையில் ஆங்கிலத்தில் பேசி அங்கே இருந்த அனைவரையும் அசர வைத்துள்ளார் விக்ரம்.

நேராக நிற்காத பைசா நகரத்து சாய்ந்த கோபுரத்தைக் கொண்டாடுகிறார்கள். ஆனால், நம்மிடம் ஏராளமான கோயில்கள் இருக்கின்றன. தஞ்சை பெரிய கோயில் இருக்கிறது. அவற்றுக்கெல்லாம் எந்த பிளாஸ்டரும் பயன்படுத்தவில்லை.

கிரேன் அல்லது பிளாஸ்டர் போன்றவை எல்லாம் இல்லாத காலத்திலேயே, மிகப்பெரிய கோபுரத்தைக் கட்ட 6 கிலோ மீட்டர் தொலைவுக்கு சாய்வுதளம் அமைத்து பல டன் எடைகொண்ட கற்களை கோபுரத்தில் ஏற்றியிருக்கிறார்கள்.  அது மட்டுமல்ல, சுமார் 6 நிலநடுக்கங்களைத் தாண்டியும் கோயில் நிலையாக நிற்கிறது என்று கூறினார் விக்ரம்.
 

மிக முன்னணி இயக்குநர்களில் ஒருவரான மணி ரத்னம் இயக்கத்தில் உருவாக்கியுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்ய கரிகாலன் வேடமேற்று நடித்திருப்பவர் விக்ரம். இவரது விடியோதான் இன்று எந்த சமூக வலைத்தளத்தைத் திறந்தாலும் ஓடிக் கொண்டிருக்கிறது.

பொன்னியின் செல்வன் படம் வருகிற 30 ஆம் தேதி நாடு முழுவதும் வெளியாகிறது. படத்தைப் போலவே படத்தை விளம்பரப்படுத்தும் முயற்சிகளில் படக்குழுவினர் வெகு பிரமாண்டமாக ஈடுபட்டு வருகின்றனர்.  அதன்  ஒரு பகுதியாக பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழா ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் முன்னிலையில் கடந்த வாரம் பிரமாண்டமாக நடைபெற்றது.  தமிழகத்தில் மட்டுமல்ல, அண்டை மாநிலங்களுக்கும் படக்குழுவினர் நேரடியாகச் சென்று மிகச் சிறப்பான முறையில் பொன்னியின் செல்வன் படத்துக்கு பிரமோஷன் செய்து வருகிறார்கள்.

படத்தில் நடித்த நடிகர், நடிகைகள், தங்களது டிவிட்டர் முகப்புப் பக்கப் பெயரை மாற்றுவது, தங்களது வசனங்களைச் சொல்லி உரையாடுவது போன்றவற்றிலும் ஈடுபட்டு வருகிறார்.

பொன்னியின் செல்வனில் வந்தியத்தேவனாக கார்த்தியும் அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவியும், குந்தவையாக திரிஷாவும் நந்தினியாக ஐஸ்வர்யா ராயும் நடித்துள்ளனர். இதில் விக்ரம், ஜெயம் ரவி, திரிஷா ஆகியோர் சகோதர, சகோதரிகளாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

சில நாள்களுக்கு முன்னதாக, 

இந்தப் படத்தில் ஆதித்ய கரிகாலனாக நடித்துள்ள விக்ரம் தனது ட்விட்டர் பக்கத்தில் பொன்னியின் செல்வன் வசனத்தைப் பகிர்ந்துள்ளார்.
அவரது பதிவில், ''சரி. தஞ்சைக்கு வருகிறேன். எட்டு திக்கும் புலிக்கொடி நாட்டும் திரைப்பயணம் தொடங்கும் முன் பெருவுடையாரின் ஆசி வேண்டுமல்லவா?குந்தவை, உடன் வருகிறாயா? வந்தியத்தேவன் வருவான். என்ன நண்பா, வருவாய் தானே? அப்படியே அந்த அருண்மொழியையும் இழுத்து வா!'' என்று குறிப்பிட்டுள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com