மாதவன் மகனை பாராட்டிய சூர்யா! 

நடிகர் மாதவன் மகனை நடிகர் சூர்யா பாராட்டி கமெண்ட் செய்துள்ளார். 
மாதவன் மகனை பாராட்டிய சூர்யா! 

தமிழ், ஹிந்தி சினிமாக்களில் பிரபல நடிகராக இருப்பவர் மாதவன். 2016இல் இவரது நடிப்பில் வெளியான இறுதிச் சுற்று திரைப்படம் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் கவனம் பெற்றார். பின்பு ‘ராக்கெட்டரி: நம்பி எபெக்ட்’ என்ற படத்தினை இயக்கி நடித்தார். இந்தப் படமும் நல்ல வரவேற்பினை பெற்றது. 

தற்போது மாதவன் ஜிடி.நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க உள்ளார். அதன் போஸ்டர் சமீபத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது. 1999இல் சரிதா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவருக்கு வேதாந் என்ற மகன் இருக்கிறார். இவர் நீச்சல் துறையில் ஆர்வமாக இருப்பவர். 

நடிகர் மாதவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “கடவுள் அருளாலும் உங்களது ஆசியினாலும் வேதாந் மலேசியாவில் நடைபெற்ற போட்டியில் இந்தியாவிற்காக 5 தங்கப் பதக்கங்களை (50மீ, 100மீ, 200மீ, 400மீ, 1500மீ) வென்றுள்ளார். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இதற்கு உதவிய பயிற்சியாளர்களுகும் நன்றி” என பதிவிட்டிருந்தார். இந்தப் பதிவின் கீழ் பல பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

நடிகர் சூர்யா, “இது மிகவும் அழகாக உள்ளது. வேதாந்த், சரிதா மற்றும் உங்களது அணியினருக்கு எனது இதய பூர்வமான வாழ்த்துகள்” என கமெண்ட் செய்துள்ளார். 

சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் ‘கங்குவா’ படத்தில் நடித்து வருகிறார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com