தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஜீவி பிரகாஷ் இசையில் மயங்கிய கங்கனா: வைரல் விடியோ

இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் இசையமைக்க அதனை மெய்மறந்து கேட்கிறார் கங்கனா ரணாவத். இந்த விடியோ இணையத்தில் வைரலாகிறது.

News image
Updated On :23 ஏப்ரல் 2023, 11:42 am

DIN

பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் இயக்கி, நடிக்கும் எமா்ஜென்சி  திரைப்படத்தின் படப்பிடிப்பை நாடாளுமன்ற வளாகத்தில் நடத்த அனுமதி கோரி மக்களவை செயலாளருக்கு கடிதம் அனுப்பி பரப்பினை கிளப்பினார். 

முன்னாள் இந்திய பிரதமா் இந்திர காந்தி, கடந்த 1975-ஆம் ஆண்டு இந்தியாவில் அவசர நிலையைப் பிரகடனப்படுத்தினாா். அவரின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாகும் ‘எமா்ஜென்சி’ திரைப்படத்தை தயாரித்து, தயாரித்து, முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாா் கங்கனா ரணாவத்.

இந்தப் படத்திற்கு தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார். ஜீவி பிரகாஷ் வாசிப்பதை கண்டு நடிகையும் இயக்குநருமான கங்கனா, “அசகாய திறமையுள்ள ஜீவி பிரகாஷ் இசையமைப்பதை ஒரு ரசிகையாக ரசித்து பார்க்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

இந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.