வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

8 நாளில் ரூ.65 கோடி வசூலித்துள்ள விரூபாக்‌ஷா தமிழ் ரிலீஸ் எப்போது தெரியுமா? 

தெலுங்கில் நல்ல வரவேற்பினை பெற்றுவரும் படமான விரூபாக்‌ஷா தமிழில் வெளியாக உள்ளது. 

News image
Updated On :29 ஏப்ரல் 2023, 9:11 am

DIN

பிரபல தெலுங்கு நடிகர் சாய் தரம் தேஜ் நடிப்பில்  மார்ச் 21இல் தெலுங்கில் வெளியான விரூபாக்‌ஷா திரைப்படம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. 8 நாளில் ரூ.65 கோடி வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படத்தில் சாய் தரம் தேஜ் கதாநாயகனாக நடிக்க சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடித்துள்ளனர். 

Story image

பிரபல தெலுங்கு இயக்குநர் சுகுமாரன் திரைக்கதை எழுதிய இந்தப் படத்தினை கார்த்திக் வர்மா தண்டு இயக்கியுள்ளார். சுகுமார், பிவிஎஸ்என் பிரசாத் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தில் சுனில், பிரமாஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

Story image

தமிழில் ஸ்டுடியோ கிரீன் சார்பாக ஞானவேல் ராஜா வெளியிடுகிறார். மே 5 முதல் தமிழில் வெளியாகுமென அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.