விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பாரதி கண்ணம்மா -2 தொடர் இந்த வாரத்துடன் முடிவுக்கு வருகிறது.
விஜய் தொலைக்காட்சியில் புதிதாக ஒளிபரப்பாகவுள்ள கிழக்கு வாசல் தொடர் ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகவுள்ளது. இதனால், அந்த நேரத்தில் ஒளிபரப்பாகிவரும் பாரதி கண்ணம்மா இரண்டாம் பாகத்தின் நிறைவுப் பகுதி இந்த வாரம் ஒளிபரப்பாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
ரோஜா தொடரில் நடித்து கவனம் ஈர்த்த சிபு சூர்யன், விணுஷா தேவி ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தத் தொடர் கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஒளிபரப்பாகிவருகிறது. தற்போதுவரை 115 எபிஸோடுகள் ஒளிபரப்பாகியுள்ளன.

இந்தத் தொடரை பிரவீன் பென்னட் இயக்குகிறார். பாரதி கண்ணம்மா
முதல் பாகத்தை இயக்கியவரும் இவர்தான். இந்தத் தொடரின் திரைக்கதையும் இறுதிக்கட்டத்தை எட்டியவாறு செல்கிறது. இந்தத் தொடரில் பாரதிக்கும் கண்ணம்மாவிற்கும் செளந்தர்யாவின் எதிர்ப்பை மீறி திருமணம் நடந்து முடிந்தது. தற்போது வெண்பாவுக்கும் பாரதிக்கும் திருமண ஏற்பாடுகள்
செய்யப்படுகின்றன.
பாரதி கண்ணம்மா -2 தொடருக்கு அடுத்தபடியாக ஆகஸ்ட் 7 முதல் இரவு 10 மணிக்கு கிழக்கு வாசல் தொடர் ஒளிபரப்பாகவுள்ளது. நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் முதல்முறையாக சீரியலில் களமிறங்கியுள்ளார். இதனால், இந்தத் தொடரின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வளைகுடாவில் பிரிட்டன் பிரதமர்! ஹோர்முஸ் நீரிணையில் தடையற்ற போக்குவரத்து குறித்து ஆலோசனை

ரூ. 13 ஆயிரம் கோடியில் ஜெய்ப்பூரின் 2 ஆம் கட்ட மெட்ரோ! மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
தமிழ்நாடு காங்கிரஸ் தேர்தல் அறிக்கை நாளை வெளியீடு!
தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!
வீடியோக்கள்

உண்மையான காங்கிரஸ் தவெகவுடன் நிற்கிறது! | Vijay full speech | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு


