தங்கலான்: மாளவிகா மோகனன் போஸ்டரை வெளியிட்ட படக்குழு
நடிகை மாளவிகா மோகனன் பிறந்த நாளை முன்னிட்டு தங்கலான் படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.


நடிகை மாளவிகா மோகனன் பிறந்த நாளை முன்னிட்டு தங்கலான் படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.
பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள தங்கலான் படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளது. இந்த படத்தில் நடிகர் பசுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் பட்ட துயரத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் படம் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் நடிகை மாளவிகா மோகனனின் பிறந்த நாளை முன்னிட்டு தங்கலான் பட போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது.
இது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்று என பதிலளித்துள்ள நடிகை மாளவிகா மோகனன் படக்குழுவுக்கு நன்றி கூறியுள்ளார். நடிகை மாளவிகா மோகனன் இன்று தனது 30வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...