அதர்வா நடித்துள்ள மத்தகம் வெப் தொடரின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வெப் தொடரில் அதர்வா, மணிகண்டன், நிகிலா விமல், கெளதம் மேனன், வடிவுக்கரசி, இளவரசு, திவ்யதர்ஷினி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். மணிகண்டன் வில்லனாக நடித்துள்ளார்.
பிரசாத் முருகேசன் இயக்கிய இந்த வெப் தொடர், தமிழ் உள்பட 7 மொழிகளில் வெளியாகிறது. ஸ்கிரீன் மீடியா எண்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ளது. சமீபத்தில் மத்தகம் வெப் தொடரின் டீசர் வெளியாகி இணையத்தில் வைரலானது.
தர்புகா சிவா இசையமைத்துள்ள மத்தகம் வெப் தொடர், வருகிற 18 ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.