
இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், மிஷ்கின், அதிதி ஷங்கர், யோகி பாபு, சரிதா உள்ளிட்ட பலர் நடித்த மாவீரன் படம் நாளை (ஆகஸ்ட் 11) அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் அசோக் செல்வன், சரத் குமார் ஆகியோரின் நடிப்பில் உருவான போர் தொழில் திரைப்படம், நாளை (ஆகஸ்ட் 11) சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
அம்மு அபிராமி மற்றும் வினோத் கிஷன் நடித்துள்ள வான் மூன்று திரைப்படம் ஆஹா ஓடிடி தளத்தில் நாளை (ஆகஸ்ட் 11) நேரடியாக வெளியாகிறது.
இதையும் படிக்க: தலைவர் நிரந்தரமா? ஜெயிலர் - திரை விமர்சனம்
அபர்ணா பாலமுரளி நடித்துள்ள பத்மினி என்ற மலையாள படம் நாளை (ஆகஸ்ட் 11) நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.