
நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்’ திரைப்படம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இதில் விநாயகன், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். கன்னட நடிகர் ஷிவ ராஜ்குமார் மலையாள நடிகர் மோகன் லால் சிறப்பு தோற்றத்திலும் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள ஜெயிலர் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இதையும் படிக்க: 5வது முறையாக இணைந்த மோகன்லால்- ஜீத்து ஜோசப்: ரசிகர்கள் ஆரவாரம்!
அதிகாலைக் காட்சிகள் எதுவும் இல்லையென்றாலும் தமிழகம் முழுவதும் ரஜினி ரசிகர்களால் இப்படம் கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும், உலகம் முழுவதும் 7,000 திரைகளிலும் தமிழகத்தில் 1,200 திரைகளிலும் இப்படம் வெளியானது. ஒட்டுமொத்தமாக உலகளவில் இப்படம் ரூ200 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க: நடிகர் தனுஷுடன் கூட்டணி எப்போது?: நெல்சன் கூறிய அப்டேட்!
ஜெயிலர் படத்தில் ரஜினிக்குப் பிறகு ஷிவ ராஜ்குமாருக்கு ரசிகர்களிடையே அமோக வரவேற்பு உள்ளது. “யாரு இவரு? வந்த கொஞ்ச சீன்லயும் மாஸா இருக்காறே!.. தனியாக ஒரு படமே நடிக்கலாம்” என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் இந்த பாராட்டுக்கெல்லாம் நன்றி தெரிவிக்கும் விதமாக விடியோ வெளியிட்டிருந்தார் நடிகர் ஷிவ ராஜ்குமார்.
நேற்றிரவு ஜெயிலர் படத்தினை பார்த்துவிட்டப் பிறகு ரசிகர்கள் ஷிவ ராஜ்குமாரை பாராட்டு மழையில் நனைத்தனர். “அனைத்து விதமான அன்பிற்கும் உரித்தானவர்” என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.