நடிகர் தனுஷின் 51-வது திரைப்படத்தின் கதாநாயகியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தனுஷ் நடிப்பில் வெளியான ‘வாத்தி’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்ற நிலையில், தற்போது இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் தனுஷ் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் தீபாவளியை முன்னிட்டு திரைக்கு வரவுள்ளது.
அடுத்து, தனது 50-வது படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் இயக்கி, நடித்து வருகிறார். இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக துஷரா விஜயனும், சகோதரர்களாக எஸ்.ஜே.சூர்யா, சந்திப் கிஷன் ஆகியோர் நடிக்கின்றனர்.
இதையும் படிக்க: ஜெயிலர்: ரஜினி, நெல்சனை பாராட்டிய கமல்!
இதனைத் தொடர்ந்து, தெலுங்கு இயக்குநர் சேகர் கமூலா இயக்கத்தில் தன் 51-வது படத்தில் தனுஷ் நடிக்க உள்ளார். இந்த படத்தில் நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளதாக படக்குழு திங்கள்கிழமை அறிவித்துள்ளது.

மேலும், நாகர்ஜுனா, சாய் பல்லவி, ஆகியோர் நடிக்க உள்ளதாகவும், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

முடங்கியது முகநூல் பக்கம்! பயனர்கள் அவதி!!

இங்கிலாந்தின் சுழலை எதிர்கொள்ள இந்திய அணி தயாரா? இறுதிப்போட்டியில் யார்?

திருச்சி வரும் பிரதமர் மோடி! 11 ஆம் தேதி பொதுக்கூட்டம்!

மடப்புரம் கோயில் காவலாளி கொலை வழக்கில் நிகிதா ஆஜர்!
வீடியோக்கள்

Vijay full speech | "தமிழ்நாடே திவாலாகப் போகிறது!" - தஞ்சையில் விஜய் பேச்சு! | TVK
தினமணி வீடியோ செய்தி...

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியா்களின் தரம் மேம்பட வேண்டும்: ஆளுநா் ஆா்.என். ரவி
தினமணி வீடியோ செய்தி...

