புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

துல்கர் சல்மானின் அடுத்த படம் இதுதானா?

நடிகர் துல்கர் சல்மானின் புதிய திரைப்படம் குறித்துத் தகவல் வெளியாகியுள்ளது.

News image
Updated On :16 ஆகஸ்ட் 2023, 9:05 am

DIN

சீதா ராமம் வெற்றியை தொடர்ந்து ’கிங் ஆஃப் கோதா’ என்ற புதிய படத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ளார். அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் உருவான இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி பெரிய வரவேற்பைப் பெற்றது.

இது பான் இந்தியப் படமாக மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடா, ஹிந்தி  என 5 மொழிகளில் வெளியாகிறது.

தொடர்ந்து, தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிக்கும் படத்திற்கு ’லக்கி பாஸ்கர்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

வெங்கி அட்லூரி நடிகர் தனுஷை வைத்து ‘வாத்தி’ திரைப்படத்தை இயக்கினார். ஆனால், அப்படம் விமர்சன ரீதியாக தோல்விப்படமானது.

இந்நிலையில், இயக்குநர் அட்லியின் உதவி இயக்குநரானா கார்த்திகேயன் வேலப்பன் இயக்கத்தில் ‘கோலி’ என்கிற படத்தில் துல்கர் சல்மான் நடிக்க உள்ளதாகவும் இதில் நாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு இசை - ஜி.வி.பிரகாஷ் என்றும் தகவல்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.