இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

தனுஷ் 50: ஒரே கட்டமாக நடைபெறும் படப்பிடிப்பு!

நடிகர் தனுஷ் இயக்கத்தில் உருவாகும் ‘தனுஷ் - 50’ படத்தின் படப்பிடிப்பு ஒரே கட்டமாக நடைபெற்று முடிய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News image
Updated On :18 ஆகஸ்ட் 2023, 9:45 am

DIN

தனுஷ் நடிப்பில் வெளியான ‘வாத்தி’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்ற நிலையில், தற்போது இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் தனுஷ் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் டிச.15 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.

தொடர்ந்து, தன் 50-வது படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் இயக்கி வருகிறார். 

இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக துஷரா விஜயனும் முக்கியக் கதாபாத்திரத்தில் சந்திப் கிஷன், செல்வராகவன் ஆகியோர் நடிக்கின்றனர்.

ராயர் என்கிற தலைப்பில்(தகவல்) உருவாகவுள்ள இப்படத்தில் தனுஷ் வடசென்னையை மையமாகக் கொண்ட கேங்க்ஸ்டராக நடிக்கிறார். மேலும், இப்படத்தில் தனுஷின் சகோதரர்களாக எஸ்.ஜே.சூர்யா, காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் நடித்து வருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

இதற்காக, சென்னையின் பிரபல ஸ்டூடியோவில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இந்நிலையில், ஒரே கட்டமாக இப்படப்பிடிப்பு நடைபெற உள்ளதாகவும் வருகிற அக்டோபர் மாதத்தில் மொத்த படப்படிப்பும் நிறைவடையும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.