உத்தர பிரதேச ஆளுநரை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த்!
நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படம் கடந்த ஆக.10இல் திரையரங்குகளில் வெளியானது. இதில் விநாயகன், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். கன்னட நடிகர் ஷிவ ராஜ்குமார், மலையாள நடிகர் மோகன் லால் சிறப்பு தோற்றத்திலும் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள ஜெயிலர் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
உலகம் முழுவதும் 7,000 திரைகளிலும் தமிழகத்தில் 1,200 திரைகளிலும் இப்படம் வெளியானது. முதல் வார முடிவில் உலகம் முழுவதும் 375.40 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
படம் வெளியான பிறகு நடிகர் ரஜினிகாந்த் இமயமலை சென்றார். தற்போது உத்தர பிரதேச ஆளுநர் ஆனந்தி பென் படேலை சந்தித்துள்ளார். இதயனையடுத்து மாலை 7 மணிக்கு உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதியநாத் உடன் ஜெயிலர் படம் பார்க்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
இது அரசியல் சந்திப்பா அல்லது படம் தொடர்பானதா அல்லது மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டும்தானா எனப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.