மாணவர் பாரதிதாசனுக்கு கல்வி நிதி விடுவிக்கப்படும்! - அமைச்சர் வன்னி அரசுசென்னை குற்றப்பிரிவில் அன்பில் மகேஸ் ஆஜர்!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!

திருச்சிற்றம்பலம் படக்குழு சந்திப்பு: தனுஷ்- நித்யா மேனனின் கூட்டணி எப்போது? 

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்தின் ஒராண்டு நிறைவையொட்டி படக்குழு சந்தித்த புகைப்படங்கள் இணையத்தில் வைராகி வருகின்றன. 

Published On :

யாரடி நீ மோகினி படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் மித்ரன் கே. ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்த படம் - திருச்சிற்றம்பலம். நித்யா மேனன், ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர் கதாநாயகிகளாக நடித்தார்கள். பாரதிராஜா, பிரகாஷ் ராஜ் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்த இப்படத்துக்கு அனிருத் இசையமைத்திருந்தார்.

Story image

சன் பிக்சர்ஸ் தயாரித்த இப்படம் கடந்தாண்டு ஆகஸ்ட் 18 அன்று வெளியாகி ரசிகர்களின் பாராட்டைப் பெற்றது. நீண்ட இடைவேளைக்குப் பிறகு தனுஷ் - அனிருத் இணைந்து பணியாற்றியது திருச்சிற்றம்பலம் படத்துக்கு கூடுதல் பலமாக அமைந்திருந்தன. விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்ற திருச்சிற்றம்பலம், ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததும் குறிப்பிடத்தக்கது.

Story image

இந்நிலையில் படக்குழு சந்தித்த புகைப்படங்களை நேற்றிரவு நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

Story image

தனுஷ் தனது 50வது படத்தினை இயக்குவதில் மும்முரமாக உள்ளார். நடிகை நித்யா மேனன் மலையாள படங்களில் நடித்து வருகிறார். தனுஷ்- நித்யாமேனன் ஜோடி மீண்டும் எப்போது வருமென ரசிகர்கள் ஆவலாக உள்ளார்கள். 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.