
யோகிபாபு நடிப்பில் உருவாகியுள்ள லக்கி மேன் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
ஆர்ஜேவாக இருந்து நடிகரான பாலாஜி வேணுகோபால் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படத்தில் யோகி பாபு உடன் வீரா பாபு, ரேச்சல் ரெபேக்கா, அப்துல் லீ, ஆர்.எஸ்.சிவாஜி, அமித் பார்கவ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஷான் ரோல்டன் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார். சந்தீப் கே விஜய் ஒளிப்பதிவு செய்ய, திங்க் ஸ்டுடியோஸ் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படம் செப்டம்பர் 1 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், லக்கி மேன் படத்தின் டிரைலரை இன்று ஆர்யா மற்றும் அருண் விஜய் வெளியிட்டனர். தற்போது இந்த டிரைலர் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.