ஆதரவும் எதிர்ப்பும் பெறும் நடிகர் ரஜினியின் செயல்! 

ஆதரவும் எதிர்ப்பும் பெறும் நடிகர் ரஜினியின் செயல்! 

நடிகர் ரஜினிகாந்த் உத்தர பிரதேச முதல்வர் காலில் விழுந்தது சமூக வலைதளங்களில் பேசு பொருளாகியுள்ளது. 
Published on

நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படம் கடந்த ஆக.10இல் திரையரங்குகளில் வெளியானது. முதல் வார முடிவில் உலகம் முழுவதும் 375.40 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

படம் வெளியான பிறகு நடிகர் ரஜினிகாந்த் இமயமலை சென்றார். நேற்று காலை உத்தர பிரதேச ஆளுநர் ஆனந்தி பென் படேலை சந்தித்தார். இதயனையடுத்து மாலை உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதியநாத் உடன் ஜெயிலர் படம் பார்க்க உள்ளதாக கூறப்பட்டது. பின்னர் துணை முதல்வருடன் ரஜினி படம் பார்த்தார். 

லக்னௌவில் முதல்வர் யோகி ஆதியநாத் இல்லத்தில் அவரது காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்ற நடிகர் ரஜினியின் விடியோ இணையத்தில் வைரலானது. ரஜினி செய்தது தவறெனவும் ரஜினி செய்தது  தவறில்லை என்றும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

“தன்னைவிட வயதில் குறைந்தவர் காலில் விழுவது சரியில்லை”, “காலா படத்தில் நடித்த ரஜினியா இது?” “சுயமரியாதை என்பது இதுவா?” என இணையவாசிகள் சரமாரியான கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

ரஜினி ரசிகர்கள் யோகி ஆதியநாத் துறவி போன்றவர் அவரது காலில் விழுந்தது தவறில்லை எனவும் இணையத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com