8 விரைவு ரயில்கள் அதிவிரைவு ரயில்களாக மாற்றம்!கூட்டுறவுத் துறை ஊழியர்களுக்கு 20% வரை தீபாவளி போனஸ்!தமிழ்நாடு அரசு போக்குவரத்து பணியாளர்களுக்கு போனஸ்!இளைஞர்களைக் கவரும் ரூ.111 ரீசார்ஜ் பிளான்! ஜியோவில் அறிமுகம்முடி வெட்டாத மாணவர்களுக்கு மொட்டை அடியுங்கள்! ஆசிரியர்களுக்கு அமைச்சர் ஜெகதீஸ்வரி அறிவுறுத்தல்!சிறைகளில் பாதுகாப்பை வலுப்படுத்த உயர்நிலைக் குழு: முதல்வர் விஜய் உத்தரவு!

லோகேஷ் கனகராஜ் படத்தில் விக்ரம்?: வைரலாகும் புதிய தோற்றம்!

நடிகர் விக்ரம் தனது சமூக வலைதள பக்கத்தில் புதிய புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

Updated On :

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்த தங்கலான் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தன. இந்த படத்தில் பசுபதி, பார்வதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

Story image

கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் அனுபவித்த துயரத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள படம் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Story image

இந்நிலையில் நடிகர் விக்ரம் தனது புதிய கெட்டபினை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். கிட்டதட்ட மொட்டை அடித்ததுபோல முடியினை மிகவும் ஒட்ட வெட்டியுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. 

Story image

லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் அவரது உதவி இயக்குநர் இயக்கும் படத்திற்காக விக்ரம் இதுமாதிரி மாறியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. லியோ படப்பிடிப்பு முடித்து ரஜினி 171 படத்திற்காக ஸ்கிரிப்ட் வேலைகளில் லோகேஷ் உள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

Story image

விக்ரமின் இந்தப் புகைப்படங்களுக்கு ரசிகர்கள், “பீமா பட வைப்”,“பீமா படம் நினைவுக்கு வருகிறது” என கமெண்ட்டுகளில் கருத்து தெரிவித்து வருகின்றனர். பீமா படம் 2008இல் லிங்குசாமி இயக்கத்தில் வெளியான படம். இதில் நடிகை த்ரிஷாவுடனான ரொமான்ஸ் காட்சிகள் மிகவும் பிரபலமானது. 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.