தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்நாளை பட்ஜெட் தாக்கல்: இன்று மாலை தவெக எம்எல்ஏக்கள் கூட்டம்!இன்று தமிழகத்தை அடைகிறது கா்நாடக அணை காவிரி நீா்!தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்: முக்கிய அறிவிப்புகள் வெளியாகின்றனஇந்தியப் பொருளாதாரம் 7.7% வளா்ச்சி!தமிழகத்தில் ஆக. 9 வரை மழைக்கு வாய்ப்புஉறுப்பு மாற்று சிகிச்சையில் தமிழகம் முதலிடம்!
/

உத்தர பிரதேச ஆளுநரை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த்! 

நடிகர் ரஜினிகாந்த் இமயமலை பயணத்தை முடித்தப் பிறகு உத்தர பிரதேச ஆளுநரை சந்தித்துள்ளார். 

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 8:21 am IST

நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படம் கடந்த ஆக.10இல் திரையரங்குகளில் வெளியானது. இதில் விநாயகன், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். கன்னட நடிகர் ஷிவ ராஜ்குமார், மலையாள நடிகர் மோகன் லால் சிறப்பு தோற்றத்திலும் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள ஜெயிலர் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். 

Story image

உலகம் முழுவதும் 7,000 திரைகளிலும் தமிழகத்தில் 1,200 திரைகளிலும் இப்படம் வெளியானது. முதல் வார முடிவில் உலகம் முழுவதும் 375.40 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

Story image

படம் வெளியான பிறகு நடிகர் ரஜினிகாந்த் இமயமலை சென்றார். தற்போது உத்தர பிரதேச ஆளுநர் ஆனந்தி பென் படேலை சந்தித்துள்ளார். இதயனையடுத்து மாலை 7 மணிக்கு உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதியநாத் உடன் ஜெயிலர் படம் பார்க்க உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Story image

இது அரசியல் சந்திப்பா அல்லது படம் தொடர்பானதா அல்லது மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டும்தானா எனப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.