ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

அடுத்த படமும் இவரோடுதான்: அதிகாரபூர்வமாக அறிவித்த தனுஷ்! 

நடிகர் தனுஷ் தனது அடுத்த படத்தினை இயக்கும் இயக்குநர் குறித்து  அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். 

News image
Updated On :20 ஆகஸ்ட் 2023, 9:11 am

DIN

அருண் மாதேஸ்வரன் இயக்கும் கேப்டன் மில்லர் படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.  

கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடிக்க, முக்கிய வேடத்தில் சந்தீப் கிஷன் மற்றும் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.

படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் தனுஷின் 40-வது பிறந்தநாளை முன்னிட்டு கேப்டன் மில்லர் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டனர். அதிரடி காட்சிகளால் நிறைந்துள்ள டீசர் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறது. இப்படம் வருகிற டிச.15 ஆம் தேதி வெளியாகும் என்றும் அறிவிக்கப்படுள்ளது. 

Story image

இந்நிலையில் இயக்குநரின் மீதான் அதீத நம்பிக்கையினால் தனது அடுத்த படமும் இவரோடுதான் என அறிவிப்பினை வெளியிட்டுள்ளார் தனுஷ். தனது சொந்த தயாரிப்பான வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

Story image
Story image

தனுஷ் தற்போது தனது 50வது படத்தினை இயக்குவதில் மும்முரமாக இருக்கிறார். அநேகமாக தனுஷ் 51வது படமாக இது இருக்கலாம் என யூகிக்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.