என்னிடம் இதுவரை யாரும் காதலை கூறியதே இல்லை: நடிகை ஸ்ரீ லீலா வருத்தம்! 

பிரபல தெலுங்கு நடிகை ஸ்ரீ லீலா தனக்கு இதுவரை லவ் ப்ரபோசல் வரவே இல்லையென வருத்தம் தெரிவித்துள்ளார். 
என்னிடம் இதுவரை யாரும் காதலை கூறியதே இல்லை: நடிகை ஸ்ரீ லீலா வருத்தம்! 

அமெரிக்காவில் பிறந்த தெலுங்கு பேசும் ஸ்ரீ லீலா பெங்களூரில் வளர்ந்தவர். மருத்துவ படிப்பினை 2021இல் முடித்தார். அதற்கு முன்பாகவே படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 2019இல் கன்னட படத்தில் அறிமுகமானாலும் தெலுங்கில்தான் பிரபல நடிகையாக அறியப்படுகிறார். 2022இல் இரண்டு மாற்றுத்திறனாளி குழந்தைகளை தத்தெடுத்துள்ளார்.

சமீபத்தில் ரவி தேஜாவுடன் தமாகா படத்தில் நடித்து மிகப்பெரும் ஆதரவினைப் பெற்றார். சிறிய வயதிலிருந்தே பரதநாட்டியம் ஆடிப் பழகியவர். இவரது பல்சர் பாடல் செம்ம வைரலானது. 

தற்போது மகேஷ்பாபு, பவன்கல்யாண், நந்தமுரி பால கிருஷ்ணா, விஜய் தேவரகொண்டா ஆகியோர் படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். 

ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் தயாரிக்கும் படத்தில் ராம் பொத்தினேனி நடிக்கும் படம்தான் ஸ்கந்தா. இந்நிலையில் இந்தப் பட புரமோஷன் நிகழ்ச்சியில்  ஸ்ரீ லீலா பேசியது ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது. செப்.15 ஆம் நாள் இந்தப் படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதில், “எனக்கு இதுவரை யாரும் லவ் ப்ரபோசல் செய்யவே இல்லை” என வருத்தமாக கூறினார். பின்னர், “ஒருவேளை இந்தப்படம் வெளியான பிறகு ப்ரபோசல் அதிகமாக வருமென நினைக்கிறேன். இந்தப் படம் உங்களுக்கு பிடிக்கும்” என ஜாலியாக கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com