திருப்பதியில் நடிகர் விமல்: புகைப்படம் வைரல்!
நடிகர் விமல் தனது பிறந்த நாளையொட்டி திருப்பதிக்கு சென்றுள்ளார்.


நடிகர் விமல் தனது பிறந்த நாளையொட்டி திருப்பதிக்கு சென்றுள்ளார்.
சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகர் விமல், பசங்க படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானார். களவானி திரைப்படம் இவரின் திரையுலக பயணத்தில் திருப்புமுனையாக அமைந்தது.
கடந்த சில ஆண்டுகளாக அவர் நடித்து படங்கள் தோல்வியை சந்தித்த நிலையில், அதன் பிறகு அவர் நடித்த விலங்கு வெப் தொடர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
புதிய வெப் தொடர் ஒன்றில் நடிகர் விமல் நடித்து வருகிறார். இத்தொடரில் விமலுக்கு ஜோடியாக பாவ்னி மற்றும் திவ்யா துரைசாமி கதாநாயகிகளாக நடித்து வருகின்றனர். இந்த வெப் தொடரை ராமு செல்லப்பா இயக்குகிறார்.

விமல் நடிப்பில் ஆக்ஷன் திரில்லராக படமாக உருவாகி உள்ள துடிக்கும் கரங்கள் திரைப்படம் செப்டம்பர் 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இதையும் படிக்க: பிக் பாஸ் 7-ல் தொகுப்பாளர் பாவனா, பாடகி ராஜலட்சுமி?
இந்த நிலையில், நடிகர் விமல் தனது பிறந்த நாளையொட்டி திருப்பதி கோயிலுக்கு சென்றுள்ளார். அவர் திருப்பதி கோயிலின் முன்பு எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...