ஹிந்தி எதிர்ப்பு மாணவராக நடிக்கும் சூர்யா?

நடிகர் சூர்யா - இயக்குநர் சுதா கொங்காரா நடிப்பில் உருவாக உள்ள படத்தின் கதை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
ஹிந்தி எதிர்ப்பு மாணவராக நடிக்கும் சூர்யா?

நடிகர் சூர்யா தற்போது கங்குவா படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து, அவரின் 43-வது படத்தை இயக்குநர் சுதா கொங்காரா இயக்குகிறார்.

முன்னதாக, சுதா கொங்காரா இயக்கிய ‘சூரரைப் போற்று’ படத்தில் நடித்து சிறந்த நடிகருக்கான தேசிய விருதை சூர்யா வென்றிருந்தார். இக்கூட்டணி மீண்டும் இணைய உள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மேலும், படத்திற்கு புறநானூறு என்கிற வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளனர். படத்தின் பெயரை அறிவிக்கவில்லை. 

படத்தின் அறிவிப்பு விடியோவில் போராட்டம், மக்கள் கூட்டம், ரேடியோ, பழைய ரக துப்பாக்கி, ஒலிவாங்கி ஆகியவை இடம்பெற்றுள்ளதால் இப்படம் அரசியலை மையப்படுத்தி 1970 - 80களில் நடக்கும் பிரியடிக் படமாக (period film) உருவாக வாய்ப்புள்ளதாகத் தோன்றுகிறது. 

இதில், நடிகர்கள் துல்கர் சல்மான், விஜய் வர்மா, நடிகை நஸ்ரியா ஆகியோர் நடிக்க உள்ளதையும் கூறியுள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜனவரி மாதம் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் துவங்க உள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில், இப்படத்தில் நடிகர் சூர்யா கல்லூரி மாணவனாக நடிப்பதுடன் ஹிந்தி மொழித் திணிப்புக்கு எதிராக நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சூரரைப் போற்று படத்திலும் கல்லூரி மாணவனாக நடித்து ஆச்சரியப்படுத்தியிருந்தார்.

கங்குவா படத்தை முடித்த பின், இதன் படப்பிடிப்பில் சூர்யா கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் 100-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Dear all we are excited! Joining hands with @Sudha_Kongara again in a @gvprakash musical, his 100th! SO looking forward to work with my brother @dulQuer & the talented #Nazriya & the performance champ @MrVijayVarma Glad @2D_ENTPVTLTD is producing this special film! #Jyotikapic.twitter.com/wW9iu0jMeR

— Suriya Sivakumar (@Suriya_offl) October 26, 2023

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com