கிளாசிக்; அனிமல் படத்துக்குப் பிறகு இந்திய சினிமாவின் முகமே மாறிவிடும்: அல்லு அர்ஜுன்

நடிகர் அல்லு அர்ஜுன் தனது எக்ஸ் பதிவில் அனிமல் படத்தினை இந்திய சினிமாவின் கிளாசிக் எனப் பாராட்டியுள்ளார்.
கிளாசிக்; அனிமல் படத்துக்குப் பிறகு இந்திய சினிமாவின் முகமே மாறிவிடும்: அல்லு அர்ஜுன்

‘அர்ஜூன் ரெட்டி’ படத்தின் மூலம் புகழ் பெற்ற இயக்குநர் சந்தீப் வங்கா இயக்கத்தில் உருவாகியுள்ளது அனிமல். பிரபல ஹிந்தி நடிகர் ரன்பீர் கபூர், ராஷ்மிகா நடித்துள்ள இந்தப் படத்திற்கு மத்திய தணிக்கை வாரியம்  ‘ஏ’ சான்றிதழ் அளித்துள்ளது. படத்தின் மொத்த நேரம் 3 மணி நேரம் 21 நிமிடங்கள். 

அப்பாவுக்கும் மகனுக்கும் இடையேயான உறவைப் பேசும் கதையாக உருவாகியுள்ளது. படம் ரசிகர்கள் மத்தியில் அதிரடியான வரவேற்பினை பெற்று வருகிறது. சிலர் பெண்களுக்கு எதிரான படம் எனவும் விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் அல்லு அர்ஜுன் தனது எக்ஸ் பதிவில் அனிமல் படத்தினை இந்திய சினிமாவின் கிளாசிக் எனப் பாராட்டியுள்ளார். மேலும், “அற்புதமான சினிமா. சினிமாட்டிக் மேதமையால் எனது மூளையே அதிர்ந்துவிட்டது. ரன்பீர் கபூர் தனது நடிப்பின் மூலம் இந்திய சினிமாவை வேறு தளத்துக்கு கொண்டு சென்றுள்ளார். மிகவும் உத்வேகமாக இருக்கிறது. நீங்கள் (ரன்பீர்) உருவாக்கிய அற்புதம் குறித்து விவரிக்க எனக்கு வார்த்தைகளே போதவில்லை. உங்களின் மீது அதிகபட்ச மரியாதை உருவாகியுள்ளது. 

ராஷ்மிகாவின் சிறந்த நடிப்பு இதுதான். இன்னும் அதிகமாக விரைவில் வெளிப்படும். 

சந்தீப் வங்கா- சினிமாவின் அனைத்து வரைமுறைகளையும் மீறிவிட்டீர்கள். அதன் தீவிரத்துக்கு ஈடு இணையே இல்லை. மீண்டும் ஒருமுறை எங்களை பெருமைப்படுத்திவிட்டீர்கள். அனிமல் படத்துக்குப் பிறகு இந்திய சினிமாவின் முகம் வருங்காலத்துக்கு எப்படி மாறப்போகிறதென தெளிவாக பார்க்க முடிகிறது. அனிமல் இந்திய சினிமாவின் கிளாசிக்குகளில் சேர்ந்து விட்டது” எனப் புகழ்ந்து பதிவிட்டுள்ளார். 

பிரபாஸ் படத்துக்குப் பிறகு இயக்குநர் சந்தீப் வங்கா இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com