ஜெயிலர் படம் எடுக்கும்போது மிகவும் பயமுறுத்தினார்கள்: மனம் திறந்த நெல்சன்!

ஜெயிலர் படப்பிடிப்பு குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் இயக்குநர் நெல்சன் திலீப்குமார். 
ஜெயிலர் படம் எடுக்கும்போது மிகவும் பயமுறுத்தினார்கள்: மனம் திறந்த நெல்சன்!

ரஜினி நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியான படம் ஜெயிலர். நெல்சன் இயக்கியிருந்த இந்தப் படம் வெளியான நாள் முதல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

ரூ. 600 கோடி வசூலைக் கடந்து ஜெயிலர் கலக்கியது. இதையடுத்து படத்தின் தயாரிப்பாளரான கலாநிதி மாறன் நடிகர் ரஜினிகாந்த்தை நேரில் சந்தித்து தான் விருப்பப்பட்ட தொகையை அவருக்கு காசோலை மூலம் தந்ததுடன் ரூ.1.64 கோடி மதிப்புள்ள பிஎம்டபிள்யூ ரக சொகுசு கார் ஒன்றையும் பரிசளித்துள்ளார்.

இதேபோல் படத்தின் இயக்குநர் நெல்சனுக்கும் கார் ஒன்றை பரிசாக படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் வழங்கினார்.

சமீபத்திய யூடியூப் நேர்காணல் ஒன்றில் இயக்குநர் நெல்சன், “ரஜினி சாரின் மாஸ் பிடிக்கும். அவரது ஸ்டைல், வசனங்களை மட்டும் பிராதானப்படுத்தி சண்டைக் காட்சிகளை குறைத்து படமாக்க விரும்பினேன். அவரது வயதுக்கு ஏற்றார்போல படமாக்கினேன். அவரது தலைமுடிக்கு டை அடிக்கவில்லை. இதெல்லாம் செய்யும்போது உடனிருப்பவர்கள் என்னை மிகவும் பயமுறுத்தினார்கள். 

மிகப் பெரிய கமர்ஷியல் ஹீரோ சண்டையே செய்யாமல் எப்படி? என சண்டைப் பயிற்சியாளர்கள் உள்பட பலரும் படப்பிடிப்பின்போது பயமுறுத்தினார்கள். 

இதெல்லாம் மக்களுக்கு பிடிக்குமா என்ற சந்தேகத்துடனே படமாக்கினேன். ஆனால் எனக்குள் நம்பிக்கையும் இருந்தது. படம் ரிலீஸ் ஆகும்வரை பயம் இருந்தது. நல்லவேளையாக மக்களுக்கு படம் பிடித்திருந்தது; நான் தப்பித்தேன்” எனக் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com