என்னை மாற்றிய நபர் இவர்தான்: மாளவிகா மோகனன் நெகிழ்ச்சிப் பதிவு!

நடிகை மாளவிகா மோகனன் தன்னை மாற்றிய திரைப்படமும் நபர் குறித்தும் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். 
என்னை மாற்றிய நபர் இவர்தான்: மாளவிகா மோகனன் நெகிழ்ச்சிப் பதிவு!
Published on
Updated on
2 min read

பிரபலமான ஈரான் இயக்குநர் மஜித் மஜித்தின் இயக்கத்தில் 2017இல் வெளியான பியாண்ட் தி கிளவுட்ஸ் எனும் படத்தில் மாளவிகாவின் நடிப்பு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பினை பெற்றது. தமிழில் நடிகர் ரஜினியின் பேட்ட படத்தின் மூலம் நடிகையாக மாளவிகா மோகனன் அறிமுகமானார். 

இதனைத் தொடர்ந்து நடிகர் விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார். திரையரங்குகளில் வெளியான மாஸ்டர் பெரும் வெற்றி பெற்றது. பா.ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்து முடித்துள்ளார். 

சமீபத்தில் மலையாளத்தில் வெளியான கிறிஸ்டி திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பினை பெற்றது குறிப்பிடத்தக்கது. 

ஒரே விதமான கதாபாத்திரங்களுக்குள் சிக்கிக் கொள்ளாமல், பலவிதமான பாத்திரங்களை ஏற்று,  சினிமா உலகில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.

இதையும் படிக்க: மறுவெளியீடான 3 படங்கள்!

தங்கலான் படத்தில்...
தங்கலான் படத்தில்...

தங்கலான் படத்தில் தீவிரமான ஆக்‌ஷன் காட்சிகளில் நடித்துள்ளார். இந்தப் படத்துக்காக மாளவிகா சிலம்பம் பயிற்சிகளில் ஈடுபட்டு வந்ததும் குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் இயக்குநர் பா. ரஞ்சித் பிறந்தநாளில் நடிகை மாளவிகா தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது: 

எங்கு தொடங்குவது தெரியவில்லை. நடிகர்/நடிகைகளாக எங்களுக்கு ஒரு படத்திலிருந்து மற்றொரு படம் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம். சில படங்கள் ஜாலியாக, புதுமையாக, கடினமாக இருக்கும். சில படங்கள் கணக்குக்காக செய்வோம். ஒரு படம் என்னை மாற்றியதை என்றால் நிச்சயமாக தங்கலான் படத்தினை சொல்லுவேன். (இதை வெறுமனே சொல்லவில்லை). 

இந்தப் படம் என்னையே எனக்குள் ஆழத்துக்கு நீந்தச் செய்தது. இதற்கு முன்பாக நான் கேள்வியே கேட்டிராத விஷயங்கள் குறித்து கேள்வி கேட்க வைத்தது. என்னை இவ்வளவு தூரம் மாற்றியது இந்தப் படம் இல்லை; இந்தப் படத்தினை இயக்கியவர்தான் என பிறகுதான் புரிந்தது. அவருடன் ஒரு வருடம் பணிபுரிந்தப்  பிறகு அவரைப் பற்றி பேசும்போது உணர்ச்சிவசப்படாமல் இருக்க முடியுமென யோசிக்கக்கூட முடியவில்லை. 

முதலில் அவரிடம் பயந்து பயந்து வேலை செய்தேன். தற்போது அவரை எனது நெர்ங்கிய நண்பன் எனக் கூறுவேன். வலுவான உணர்திறன்மிக்க அற்புதக் கலவையான இவர் தான் கூறியபடி நடப்பதும், தான் நம்புவதற்காக போராடுவதும், என்ன நடந்தாலும் நமக்காக எப்போதும் இருப்பார். பிறந்த்நாள் வாழ்த்துகள் ரஞ்சித். என்னை உங்களில் ஒருவராக மாற்றியதற்கு நன்றி” எனக் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com