மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

யஷ் படத்தில் ஷ்ருதி ஹாசன்!

நடிகர் யஷ், இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிகை ஷ்ருதி ஹாசன் இணைய உள்ளதாகத் தகவல்.

News image
Updated On :13 டிசம்பர் 2023, 5:39 am

மலையாளத்தில், ‘லையர்ஸ் டைஸ்’ ,’மூத்தோன்’ ஆகிய படங்களை இயக்கியவர் கீது மோகன்தாஸ். நடிகையான இவர் இயக்குநராக அறிமுகமாகி பல விருதுகளைப் பெற்றுள்ளார். இவரின் கணவர் ராஜீவ் ரவியும் சிறந்த இயக்குநராக அறியப்படுகிறார்.

நடிகர் யஷ் இயக்குநர் கீது மோகன் தாஸ் இயக்கத்தில் தன் 19-வது படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.

தொடர்ந்து, இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அதன்படி, யஷ் 19-வது படத்துக்கு  டாக்ஸிக் (Toxic) எனப் பெயரிட்டுள்ளனர். 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இப்படம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கேவிஎன் புரோடக்‌ஷன்ஸ் தயாரிக்கிறது.

ரூமியின் புகழ்பெற்ற, ‘எதை நீ தேடிக்கொண்டிருக்கிறாயோ, அது உன்னைத் தேடுகிறது’ என்கிற வாசகத்தை படத்துக்கு பயன்படுத்தியுள்ளனர். 

இந்நிலையில், இப்படத்தில் மூன்று நாயகிகள் நடிக்க உள்ளதாகவும் அதில் ஒருவர் நடிகை ஷ்ருதி ஹாசன் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.